--- --:--:-- --

கால்பந்து வீரர் உயிரிழப்பு..!சவப்பெட்டியை கோல் அடிக்கவைத்து நண்பர்கள் கண்ணீர்..!

28

மெக்சிகோ நாட்டில் 16 வயதுடைய கால்பந்து வீரர் கொல்லப்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கோல் போட்டு உடல் அடக்கம் செய்யப்பட்ட வீடியோ பார்ப்பவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

 

அமெரிக்காவிலிருந்து நான்கு வருடங்களுக்கு முன்பு மெக்சிகோவுக்கு வந்தவர் அலெக்சாண்டர். இவர் இரட்டை குடியுரிமை பெற்றவர் ஆவார். கடந்த வியாழன் அன்று தனது சொந்த கிராமத்தில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடி அலெக்சாண்டர் பின்னர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

 

அவரை காவல்துறையினர் தவறுதலாக சுட்டுக் கொன்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் முன்பு சவப்பெட்டி முன்பாக நண்பர்களும் உறவினர்களும் திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

 

அப்போது அவரது நண்பர்கள் கால் பந்தை எடுத்து வந்து அதனை சவப் பெட்டியை நோக்கி அடித்து கோல் போட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Right Menu Icon