--- --:--:-- --

பத்து ரூபாய்க்கு விதவிதமான உணவு வழங்கும் உணவகம்..!

7

விருதுநகரில் பத்து ரூபாய்க்கு விதவிதமாக உணவு மற்றும் ஐந்து ரூபாய்க்கு டீ வழங்கப்படுகிறது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு பெற்றுள்ளது.

 

விருதுநகர் மாவட்டம் காயம்பட்டி பேருந்து நிலையம் அருகே விஜயகுமார் மற்றும் அவரது சகோதரி தமிழரசி ஆகியோர் இணைந்து உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த உணவகத்தில் சாம்பார் சாதம், தயிர் சாதம், புளி சாதம், தக்காளி சாதம் ஆகிய விதவிதமான உணவுகள் பத்து ரூபாய்க்கும், ஐந்து ரூபாய்க்கும் வழங்கப்பட்டுள்ளது.

 

அத்யாவசிய பொருட்களின் விலை உயர்ந்த போதிலும் இந்த உணவகத்தில் உணவுகளின் விலை உயர்த்தப்பட்டது அந்த பகுதி மக்களை ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.

 

மேலும் உணவகத்திற்கு வரும் ஆதரவற்றோர் ஏழை எளியோர் மனநலம் குன்றியோர் மற்றும் திருநங்கைகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுவதாக கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.

 

Right Menu Icon