தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழை..!
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல அடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் மழை பெய்தது.
பகலில் வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் இரவு நேரத்தில் கிண்டி ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், பல்லாவரம், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது.
சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், புழல் போன்ற இடங்களிலும் பலத்த மழை கொட்டியது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கனமழை நீடிக்கிறது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் ராமநாதபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. இதனிடையே சென்னை, திருவள்ளூர், நெல்லை, மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






