வாட்ஸ் ஆப்பை விட அதிக வசதி கொண்ட ஆப்பை உருவாக்கியுள்ள 9 ஆம் வகுப்பு மாணவன்…!
வாட்ஸ் அப் செயலியை விட அதிக வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டபுதிய தகவல் பரிமாற்று செயலியை திண்டுக்கல்லை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் உருவாக்கி அசத்தியுள்ளார். மாணவன் உருவாக்கிய செயலுக்கு கூகுள் நிறுவனம் ஒப்புதல் அளித்து ப்ளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளது.
தாமரைபாடி பகுதியை சேர்ந்த பிரானேஷ் என்ற மாணவன் ஊரடங்கை பயனுள்ள தாக்கும் விதமாக கூகுள் நிறுவனம் நடத்தும் கோடிங் கிளாசில் ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று வந்துள்ளான். அதன் மூலம் மாணவர் ஜெட் லைஃப் சட் என்ற புதிய செயலியை உருவாக்கி யுள்ளார்.
நாம் அனுப்பும் தகவலை அறிமுகம் இல்லாத நபர் யாரும் பார்க்க முடியாத வகையிலும் பதிவிறக்கம் செய்ய முடியாத வகையிலும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தகவலை ஒரே நேரத்தில் 15 பேருக்கு ஷேர் செய்யலாம். வாட்ஸ்அப் பை போன்று ஆடியோ, வீடியோ கால் மூலமும் உரையாடலாம்.






