--- --:--:-- --

கோழி கடையில் தனது கையை தானே வெட்டி துண்டாக்கிய ராணுவ வீரர்..!

7

தேனி மாவட்டம் கம்பத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தனது கையை தானே வெட்டித் துண்டாக்கி கொண்டார். காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த 37 வயது வெங்கடேசன் என்பவர் கம்பம் பேருந்து நிலையம் அருகே உள்ள கோழி கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்தார்.

 

வண்டியை நிறுத்திவிட்டு கோழி கடைக்குள் நுழைந்த வெங்கடேசன் இறைச்சி வெட்டும் கட்டையில் தனது இடது கையை வைத்து வலது கையால் நான்கு முறை வெட்டினார். மணிக்கட்டுடன் துண்டான தனது கையை அங்கேயே போட்டுவிட்டு வெங்கடேசன் உடனடியாக வெளியேறினார்.

 

கண்ணிமைக்கும் நேரத்திலே நடந்து முடிந்தது சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த கோழி கடை ஊழியர்கள் அலறியபடி வெளியேறினர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் நின்று கொண்டிருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

 

முதலுதவி சிகிச்சைக்குப் பின் துண்டான கையை குளிர் பெட்டியில் வைத்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வரும் வெங்கடேசன் எதற்காக இவ்வாறு நடந்து கொண்டார் என கம்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Right Menu Icon