தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நான்கு மாவட்டங்களில் கனமழை..!
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தேனி, கன்னியாகுமரி உட்பட நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக தேனி, கன்னியாகுமரி, நீலகிரி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
நெல்லை, ஈரோடு, சேலம், நாமக்கல் உட்பட 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனவும் கூறியுள்ளது.
மன்னார்வளைகுடா, கர்நாடகா, கேரள கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






