பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர்..!
நாகை அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே கொண்ட இந்த பள்ளியில் வேதாரணியம் அடுத்துள்ள தமிழ் செல்வன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
மது போதையில் பள்ளி வந்த தலைமையாசிரியர் அந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





