ரூ.7,175 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
பல்வேறு நிறுவனங்களில் இருந்து மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் படி சுமார் 7 ஆயிரத்து 175 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார். இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக அரசு தொழில் நிறுவனங்களுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிதாக தொடங்க உள்ள தொழில்களுக்கு சென்னை தலைமை செயலகத்தில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
டிசிஎஸ், இன்போசிஸ், ஜப்பானின் நிஷிகோரி ஆகிய நிறுவனங்களுடன் 1175 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருந்தன. அந்த ஒப்பந்தங்களுக்கு செயல்வடிவம் அமைக்கும் வகையில் தொழில்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த புதிய தொழில் நிறுவனங்கள் மூலம் 45 ஆயிரத்து 746 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





