--- --:--:-- --

நடிகர் கமல் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்

kamal2_18140_15500

உத்தமவில்லன் பட வெளியீட்டின்போது தன்னிடம் வாங்கிய 10 கோடி ரூபாய் பணத்தை நடிகர் கமலஹாசன் நான்கு ஆண்டுகளாகியும் திருப்பி தரவில்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தந்துள்ளார். கமலஹாசன் நடிப்பில் லிங்குசாமி தயாரிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு உத்தமவில்லன் திரைப்படம் வெளிவந்தது.

 

இந்த படம் எதிர்பார்த்த வசூலை கொடுக்காததால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் படம் வெளியாகும் போது பொருளாதார சிக்கல் ஏற்பட்டதால் முதல்நாள் காட்சியில் பிரதான இந்த நிலையில் கமலஹாசன் தம்மை அணுகியதாகவும் தனது தயாரிப்பில் ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக கூறி முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்றதாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை தமது படத்தில் நடிக்க கமலஹாசன் முன்வரவில்லை எனவும் 10 கோடி ரூபாய் பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். ஞானவேல் ராஜா புகார் அளித்து இருக்கும் நிலையில் உத்தமவில்லன் படத்தை தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் ஞானவேல் ராஜாவிடம் கமலஹாசன் எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon