--- --:--:-- --

நீதிமன்றத்திற்கு எதிராக பேசிய எச்.ராஜா தலைமறைவு..!

2

கீழமை நீதிமன்றம் எச்.ராஜாவுக்கு அனுப்பிய சம்மன் அல்லது வாரண்ட் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர் நீதி மன்றத்தையும் காவல்துறையினரையும் தவறான முறையில் பேசியதற்காக ஏற்கனவே உச்சநீதி மன்றத்தில் மன்னிப்புக் கோரியிருந்தார்.

 

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் வைத்து எச்ராஜா தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தலைமறைவாக உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர். இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

எனவே வழக்கில் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக முன் பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரா முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் எச் ராஜா தலைமறைவு என தெரிவிக்கப்பட்டது.

 

எனவே எச் ராஜாவுக்கு கீழமை நீதிமன்றம் சம்மன் அல்லது வாரண்ட் அனுப்பியதா எனகேள்வி எழுப்பிய நீதிபதி கீழமை நீதிமன்ற சம்மனை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon