ரேஷன் அட்டைதாரர்களுக்கு 17 பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு..!
கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 17 பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேரளாவில் அடுத்த மாதம் 21ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச ஓணம் பை இந்தமுறையும் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பையில் பாயாசம் தயாரிப்பில் முந்திரி, பருப்பு, ஏலக்காய், சேமியா அல்லது உலர் அரிசி, நெய் மற்றும் அத்தியாவசிய பொருட்களான சர்க்கரை, தேங்காய், பச்சை பயிறு, துவரம்பருப்பு, தேயிலை, மிளகாய் அல்லது மிளகாய் தூள் உப்பு, மஞ்சள், கோதுமை மாவு, வாழைக்காய் வறுவல் அல்லது சர்க்கரை பரிசு பொருட்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை வழங்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இலவச உணவு பையில் தரப்படும் உணவு பொருட்களின் தரமும் அளவும் பரிசோதிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.






