--- --:--:-- --

5 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட பிரம்மாண்ட மருத்துவமனை..!

15

சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருவதை அடுத்து 1500 படுக்கைகளுடன் கூடிய பிரம்மாண்ட மருத்துவமனை 5 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரொனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்ட நிலையில் ஹெபே மாகாணத்திலுள்ள நான்காங் என்ற இடத்தில் மீண்டும் தொற்று பரவியுள்ளது.

 

சீனா முழுவதும் 130 பேருக்கு புதிய கொரொனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர்களில் 90 பேர் ஹெபே மாகாணத்தை சேர்ந்தவர்கள் .

 

வைரஸ் வேகமாகப் பரவக் கூடும் என்பதால் நான்காங் பகுதியில் ஆயிரத்து 500 படுக்கை வசதிகள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனை 5 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மருத்துவமனையும் சேர்த்து ஹெபே மாகாணத்தில் மொத்தம் 6,500 படுக்கைகள் கொண்ட ஆறு மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஒரே வாரத்திற்குள் திறக்கப்பட உள்ளன.

Leave a Reply

Right Menu Icon