--- --:--:-- --

53 வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம்..!

16

டெல்லிக்கு சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் கடும் குளிரில் 53 வது நாளாக நடக்கிறது மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்து வருகின்றன.

 

வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படும் ஏற்று மத்திய அரசு உறுதியாக உள்ள நிலையில் வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பது விவசாயிகளின் உறுதியாக உள்ளது.

 

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய ஒன்பதாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

Leave a Reply

Right Menu Icon