பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடத்திய ஆலோசனை..!
தமிழக ஆளுநர் பன்வாரிலால்ரோகித், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
நேற்று டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து பேசினார். பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தார். இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்தார்.
இந்நிலையில் சந்திப்புகள் குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுடனும், ஆளுநர் பன்வாரிலால் முக்கிய பிரச்சினைகள் பற்றி பேசியதாகவும் கூறப்பட்டுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் கருணை மனு குறித்து முடிவெடுப்பதற்கு ஆளுநர் காலம் தாழ்த்துவதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில்
ஆளுநர் காலம் தாழ்த்துவது குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில் டெல்லி பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.







