தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளருக்கு கொரொனா தொற்று உறுதி..!
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளருக்கு கொரொனா தொற்று உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
கிண்டி ராஜ்பவனில் இருக்கக்கூடிய ஆளுநர் மாளிகையில்சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 84 பேருக்கு தொற்று ஏற்பட்டு அவர்கள் அண்ணா பல்கலைக்கழகம், கிங் இன்ஸ்டிட்யூட் ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் அவரின் உதவியாளராக இருந்தவர் கேரளாவை சேர்ந்த தாமஸ் என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் ஆளுநருக்கும் ஆளுநரின் செயலாளருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. அவர்கள் தனிமையில் இருப்பதாகவும் அவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆகமொத்தம் சென்னை கிண்டி ராஜ்பவன் இல் 87 பேருக்கு இது வரை கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் உயர் அதிகாரிகள் மற்றும் மற்றவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.






