உண்மையை சொல்ல வேண்டாம் என மோடி கூறினார் என ஆளுநர் பகீர் தகவல்
crpf வீரர்களுக்கு விமானம் கொடுக்க மறுத்ததாலேயே புல்வாமா பகுதிகளில் 40 வீரர்கள் பலியானதாக அப்போதைய ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தவர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 2019 ஆம் ஆண்டு நடந்த தீவிரவாத பயங்கர தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் பலியாகினர். 38 இந்த பேர் காயமடைந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அப்பொழுது ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தவர் தற்பொழுது அளித்துள்ள பேட்டியில் crpf பிறவர்களுக்கு விமானம் கொடுக்க மறுத்ததாலே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையை சொல்ல வேண்டாம் என மோடி கூறியதாகவும் புல்வாமா தாக்குதல் குறித்து அமைதியாக இருக்கும்படி தன்னை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





