சைதாப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு..!
சென்னை சைதாப்பேட்டை மேம்பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் மது போதையில் தவறி விழுந்தவர் உயிரிழந்தார். சைதாப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் ஒருவர் குளித்ததாக காவல்துறை கட்டுப்பாட்டு தகவல் தெரிவித்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் நிகழ்விடத்திற்கு சென்று கூவம் ஆற்றில் விழுந்தவரை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு மேம்பாலத்திலிருந்து தவறி ஆற்றில் விழுந்தது தெரிய வந்தது.





