ஆட்சி, அதிகாரம் என்பது இருமுனை கத்தி..பிரதமருக்கு முதல்வர் எச்சரிக்கை..!
ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ், கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, நாமக்கல் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் ஆகியோரை ஆதரித்து, நாமக்கல் சின்னியம்பாளையம் பகுதியில் நடந்த பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் உரையாற்றினார்.
அப்போது, வரும் பருவமழைக் காலத்திற்குள் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். மேற்கு மண்டலத்தில் ஏற்படும் தோல்வி பயத்தால் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளதாகவும், அவர் சிறையில் இருந்தாலும், களத்தில் அவரது வேலைகள் நடந்துகொண்டுதான் இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் மோடியின் செயல்பாடுகளால் இந்தியா கூட்டணியின் வலிமை அதிகரித்திருப்பதாகவும் கூறினார். PM CARES FUND குறித்து ஜூன் மாதம் பல்வேறு தகவல்கள் வெளிவரும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.பழனிசாமியால் ஒரு போதும் பாஜக-வினரை விமர்சிக்க முடியாது என்றும் அதிமுக-வின் குடுமி இப்போது பாஜக கையில் இருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.





