திமுக வேட்பாளர் கனிமொழியின் வாகனம் முற்றுகை..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாமஸ் நகரில் பரப்புரைக்கு சென்ற திமுக வேட்பாளர் கனிமொழியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கர் சிலை அமைத்து தரவேண்டும் தங்கள் பகுதியில் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்றதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வேட்பாளர் கனிமொழி உங்களின் கோரிக்கைகள் தங்களுக்கு தெரியும் என்றும் தற்பொழுது தேர்தல் என்பதால் எவ்வித வாக்குறுதியும் தர இயலாது என்று தெரிவித்தார்.
மேலும் பேச வேண்டும் என்று உங்களின் ஆவலை கண்டு மகிழ்ச்சியடைகிறேன் எனவும் கனிமொழி பொதுமக்களிடையே கூறினார்.





