--- --:--:-- --

குழந்தைக்கு பால் கொடுக்கும் பொழுது பணிநீக்கம் செய்த கூகுள்..!

7

மெரிக்காவில் ஒரு மாத குழந்தைக்கு புட்டி பால் புகட்டி கொண்டிருந்த பொழுது google நிறுவன பெண் பணியாளர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னணி நிறுவனமான google பல காரணங்களை கூறி நிறுவனத்தில் உள்ள பணியாளர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகிறது.

 

google மட்டும் இன்றி பல நிறுவனங்களும் பணி நீக்கம் செய்வது இரண்டு வருடங்களாக தொடர்வதையாகி வரும் நிலையில் அவ்வாறு பணி நீக்கம் செய்யப்படுவோர் தங்களது பணி நீக்க நிகழ்வுகளை சமூகவலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

அதேபோல லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த ஒரு பெண் பணியாளர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் அதிகாலை இரண்டு மணி அளவில் தனது ஒரு மாத குழந்தைக்கு புட்டி பால் புகட்டி கொண்டிருந்த பொழுது google நிறுவனத்தின் பணிநீக்க செய்தியை அறிந்ததாக அவர் கூறியுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் கவனத்தைப் பெற்று வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon