ஹைட்ரஜன் ரயில் நடப்பாண்டு டிசம்பருக்குள் வெளிவரும்..!
உள்நாட்டில் தயாரான ஹைட்ரஜன் ரயில் நடப்பாண்டு டிசம்பருக்கு பயன்பாட்டுக்கு வரும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் ஆன நிலையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் 2.41 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஒரு பெரிய மாற்றம் என குறிப்பிட்டார்.
வந்தே பாரத் ரயில்கள் சென்னை ஐ சி எப் மட்டுமின்றி இனி ஹரியானாவில் சோனிபத் மற்றும் மகாராஷ்டிராவில் லதுநகரங்களில் உற்பத்தி செய்யப்படும் என கூறினார். மேலும் உள்நாட்டில் தயாரான ஹைட்ரஜன் ரயில் நடப்பாண்டு டிசம்பருக்கு பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





