--- --:--:-- --

காலும் போச்சு… திருடவும் முடியவில்லை…!

8

ஐரோப்பாவில் கிரிமியன் தீபகற்பத்தில் திருடன் ஒருவன் நகை கடையின் கதவை உடைக்க முயன்று காலை உடைத்துக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

சிம்பெரோபோல் நகரில் கையில் துப்பாக்கியுடன் நகைக் கடைக்குள் நுழையும் முகமூடி அணிந்த திருடன் அங்கிருந்த நான்கு வாடிக்கையாளர்களை தரையில் படுக்கச் சொல்லிவிட்டு உள் கதவை உடைக்க முயற்சித்துள்ளார். இரண்டு முறை கதவை உதைத்த திருடன் மூன்றாவது முறை உதைக்கும் போது கால் உடைந்தது.

 

இதனால் கடுப்பாகிப் போன திருடன் கதவை பார்த்து சுட்டுவிட்டு திருடும் முயற்சியை கை விட்டு வெளியேறினான். கடந்த 23ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon