--- --:--:-- --

சாலை வசதி இல்லாததால் இளைஞரை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற கிராமத்தினர்

9

ஆந்திர மாநிலம் கிராமமொன்றில் போதிய சாலை வசதி இல்லாத காரணத்தால் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட இளைஞரை தொட்டில் கட்டி பன்னிரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மக்கள் தூக்கி சென்று ஆம்புலன்சில் ஏற்றிய பரிதாபம் அரங்கேறியுள்ளது.

 

விஜயா நகர் மாவட்டம் தன பார்த்தி கிராமத்தை சேர்ந்த ஜனதா நாகராஜூ என்ற இளைஞர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கிராமத்திற்கு போதிய சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்சில் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. இதையடுத்து தொட்டில் கட்டி அதில் நாகராஜூவை படுக்க வைத்து பன்னிரெண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு தூக்கி சென்று ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றினார்.

Leave a Reply

Right Menu Icon