தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு கொச்சி பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணை..!
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷின் ஜாமின் மனு கொச்சி பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், நாயர் சந்தீப் நாயர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர் ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை கடந்த திங்களன்று கொச்சி என்ஐஏ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதே வழக்கை சுங்கத் துறையின் விசாரித்துவரும் நிலையில் ஷோபனாவும் சந்திப்பும் கொச்சி பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜூலை 28-ஆம் தேதி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இதன் மீது நேற்று நடைபெற்ற விசாரணையில் இவர்கள் ஜாமீன் மனுக்களை என்ஐஏ நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருப்பதை சுங்கத்துறை சுட்டிக் காட்டியது. இதனையடுத்து ஸ்வப்னா, சந்தீப் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி அவற்றை இன்று விசாரிக்க உள்ளார்.






