மீண்டும் எகிறிய தங்கம் விலை..!
இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக ஆபரணத்தங்கத்தின் விலை ஓரளவுக்கு சரிந்து வருவதால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் ஏறுமுகத்தில் இருக்கிறது. கடந்த மார்ச் 23ஆம் தேதி வரலாற்றிலேயே 2வது முறை ஒரே நாளில் காலை, மாலை, இரவு என 3 முறை தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.
காலை, மாலை என இரண்டு வேளையிலும் தங்கம் விலை குறைந்த நிலையில், திடீரென மாலையில் அதிகரித்தது. தொடர்ந்து 24ஆம் தேதி காலையில் சரிந்த தங்கம் விலை மீண்டும் மாலையில் அதிரடியாக உயர்ந்தது.
பிறகு நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,600க்கும் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.108,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,670-க்கும், சவரனுக்கு ரூ.ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,09,360-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.





