--- --:--:-- --

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

2

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நயாரா பெட்ரோல் நிறுவனம் உயர்த்தியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் சிலிண்டர் புக் செய்து வாங்குவதே பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.

 

ஏற்கனவே பொதுமக்களுக்கு இருக்கும் கவலையில் தற்போது மேலும் ஒரு சிக்கலாக பெட்ரோல் – டீசல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 7,000 நயாரா பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன.

 

அதன் படி கடலூரில் நயாரா பெட்ரோல் விலை ரூ.5.30 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.107.93க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.97.22க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு பக்கம் தங்கம் விலை, மறுபக்கம் சிலிண்டர் பிரச்சனை என திண்டாடும் மக்களுக்கு இந்த செய்தி பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Right Menu Icon