--- --:--:-- --

தொடர் சரிவில் தங்கம் விலை..!

2

2026ஆம் ஆண்டு தொடங்கியதும், ஜனவரி மாதத்தில் தங்கம் விலை பல முறை அதிகரித்து புதிய புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஏற்ற இறக்கத்தில் இருந்தது. இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்தால் பங்குசந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக மார்ச் 1ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.

 

தொடர்ந்து படிப்படியாக குறைந்து வந்த தங்கம் விலை நேற்று முன் தினம் ஒரே நாளில் மட்டுமே 2 முறை குறைந்தது. நேற்று மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.185 குறைந்து ஒரு கிராம் ரூ.15,465க்கும் சவரனுக்கு ரூ.1480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,23,720க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

இதே வரிசையில் நேற்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நேற்று ஒரே நாளில் மட்டுமே 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.265 குறைந்து ஒரு கிராம் ரூ.15,200க்கும் சவரனுக்கு ரூ.2,120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,21,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.15,120க்கும் சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,160க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.295க்கும், ஒரு கிலோ ரூ.2,95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon