--- --:--:-- --

வியட்நாமில் தங்கத்திலேயே கட்டப்பட்ட ஹோட்டல்..! தங்கத்தால் மின்னும் குளியலறை, கழிவறை..!

13

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பார்கள். ஆனால் வியட்நாமில் 24 கேரட் தங்கத்தால் ஆன டைல்ஸ் கல் பதித்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்று காண்போரின் கண்களை பறித்துக்கொண்டு உள்ளது. உலகத்திலேயே சுவர் டைல்ஸ் முதல் கழிவறை வரை தங்கம் பதிக்கப்பட்டது இந்த ஹோட்டலில் தான் என்கிறார் இதன் உரிமையாளர்.

 

இந்த ஹோட்டலின் வெளிப்புறச் சுவர்கள் தங்கமுலாம் பூசப்பட்ட டைல்ஸ்களால் மின்னுகின்றன. விருந்தினர் அறை, குளியல் தொட்டி, கை கழுவும் இடம், கழிவறை வரை தங்கத்தாலேயே இழைக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் மாடியில் 24 கேரட் தங்கத்தால் ஆன நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு டன் தங்கம் இந்த கட்டடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் சூரிய ஒளியில் பிரகாசிக்கும் இந்த ஹோட்டலின் வடிவம் அருகில் உள்ள ஏரியில் பிரதிபலிப்பதும் காண்போரை வெகுவாக கவர்கிறது.

Leave a Reply

Right Menu Icon