பொறுமையை இழந்து கோலி வாக்குவாதம்..!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி இழந்த நிலையில் அணித்தலைவர் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் பொறுமையை இழந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் அப்போது கேப்டன் கோலி வழக்கத்தைவிட ஆக்ரோஷமாக கூச்சலிட்டு கொண்டாடியதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் போட்டி முடிந்ததும் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக நிருபர்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது சற்று பொறுமை இழந்து காணப்பட்ட கோலி நடந்தது என்ன என முழுமையாக தெரிந்து கொள்ளாமல் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இதுபோன்ற கேள்விகளை எழுப்ப வேண்டாம் என காட்டமாக தெரிவித்தார்.
சம்பவம் குறித்து நடுவரிடம் விளக்கம் அளிக்கப்பட்டு விட்டதாகவும் கோலி தெரிவித்தார்.





