படகை துரத்தி சென்ற ராட்சத திமிங்கலம்..!
அமெரிக்காவில் ராட்சத திமிங்கலம் ஒன்று சுற்றுலாப் பயணிகளின் படகை துரத்தி சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. வாஷிங்டன் நகரில் படம்பிடிக்கப்பட்ட இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சுற்றுலாப் பயணிகளின் படகை கண்டதும் நெருங்கிவந்த ராட்சத திமிங்கலம் வேடிக்கை காட்டியதுடன் 17 அடி நீளமுள்ள படகை சிறிது தூரம் துரத்திக் கொண்டே சென்றது.






