ராணுவ வீரர் தேவ் ஆனந்த் மரணத்திற்கு பாரிவேந்தர் இரங்கல்..!
தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரரின் மறைவுக்கு பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் பாரிவேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார். லால்குடி அருகே உள்ள திண்ணிய மலை கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் தேவ் ஆனந்த் சிக்கிம் மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இளம்வயதில் ராணுவத்திற்காக சேவையாற்றிய தேவ் ஆனந்தின் மரணம் மிகுந்த வருத்தத்தை தருவதாக பாரிவேந்தர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் பாரிவேந்தர் கூறியுள்ளார்.







