--- --:--:-- --

குப்பையால் கொட்டப்பட்ட தபால்கள்..!

6

சேவல் படத்தில் வரும் நகைச்சுவை காட்சி போல மக்களுக்கு வந்த கடிதங்களை குப்பையில் போட்ட சம்பவம் நிஜத்தில் அரங்கேறியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம்குப்பைத் தொட்டியில் அந்த பகுதி சுற்று வட்டார மக்களுக்கு வந்த கடிதங்கள் இருந்துள்ளன.

 

கடந்த ஆறு மாதங்களாக வந்து தபால்களை குப்பையில் கொட்டி சென்றது தெரியவந்தது. ஆதார் அட்டைகள், அரசு பணி கடிதங்கள், வங்கி கடிதங்கள் என பல முக்கிய கடிதங்கள் சிக்கியதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை உரிய நபர்களிடம் ஒப்படைக்க 6 உழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

காலதாமதமாக கிடைக்கும் கடிதங்களால் யாராவது பாதிக்கப்பட்டால் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்குமாறு கூறி அதிகாரிகள் குப்பையில் கொட்டுவது குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்து உள்ளனர். இந்த சம்பவம் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon