--- --:--:-- --

இந்தியாவிற்கு உதவாத அமெரிக்கா..!

7

கொரொனா தடுப்பசிக்கான மூலப்பொருள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சபட்ச பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளையும் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

 

இதனால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த நிறுவனங்கள் தடுப்பூசி களுக்கான மூலப்பொருட்கள் அமெரிக்காவில் சார்ந்திருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

 

ஏற்கனவே இந்தியாவுக்கு கொரொனா தடுப்புக்கான மூலப் பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. எனினும் அமெரிக்க அரசு அதற்கு செவி சாய்ப்பது இல்லை.

 

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடவும் உரிமை அளிக்கப்பட நிர்வாகம் பிடிவாதமாக இருக்கிறது.

 

இதனால் இந்தியாவில் கொரொனா தாக்கம் அதிகம் உள்ள நிலையில் தடுப்பு மருந்து மூலப் பொருட்களை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என அமெரிக்க வர்த்தக அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon