பள்ளிகளில் விஜய் புகைப்படம்: வெளியாட்கள் சென்று வைக்கக் கூடாது: மேயர் பிரியா எச்சரிக்கை
பள்ளிகளுக்குள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மக்கள் பிரதிநிதிகளை தவிர, சம்பந்தம் இல்லாத நபர்கள் யாரும் நுழையக்கூடாது. முதலமைச்சர் புகைப்படத்தை பள்ளிகளில் மாட்ட வேண்டும் என்றால், அது தலைமை ஆசிரியரிடம் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
அவரைத்தவிர மற்றவர்கள் நேராக வகுப்பறைக்கு சென்று முதல்வர் படத்தை வைக்க கூடாது. மீறினால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சென்னை மாமன்ற கூட்டத்தில், மேயர் பிரியா எச்சரிக்கை விடுத்துப் பேசினார்.





