நிறைமாத கர்ப்பிணி.. மேடையில் இருந்து இறங்கி வந்த முதல்வர் விஜய்..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 383 உதவி பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய மின்வாரியத் துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார், ” இந்த துறையில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான காலியிடங்கள் நிரப்பப்படமால் இருப்பதாகவும், மின் பழுதுகளை சரி செய்திட தேவையான 15,000 மின் பணியாளர்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என முதல்வரிடம் தெரிவித்ததாகவும், அரை மணி நேரத்தில் அதற்கு முதல்வரிடம் இருந்து ஒப்புதல் கிடைத்ததாகவும் தெரிவித்தார்.
கடந்த 25 ஆண்டுகால ஆட்சிகளில் மின்வாரியத் துறை சீரழிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், மின்வாரியத்தைச் சீரமைக்க வேண்டிய சரியான தருணம் இதுதான் என்றும், இப்போது தவறவிட்டால் மின்வாரியத் துறையைக் காப்பாற்ற முடியாது என்றும் தெரிவித்தார். இதையடுத்து, மின்சாரத் துறை பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணி ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். முதல் பெயராக நிறைமாத கர்ப்பிணியாக இருக்குஜ்ம் அட்சயலட்சுமியின் பெயர் அறிவிக்கப்பட்டது.
உடனடியாக, முதல்வர் விஜய் மேடையில் இருந்து இறங்கிச் சென்று அட்சயலட்சுமி இருக்கும் இடத்திற்கு சென்று பணி நியமன ஆணை வழங்கினார். அட்சயலட்சுமிக்கு ஜூன் 28 ஆம் தேதி பிரசவ தேதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடக்கத்தக்கது. அட்சயலட்சுமியைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
நாளை இந்த உலகிற்கு வருகை தரும் அந்த புத்தம் புதிய உயிருக்கும் தமிழ்நாடு அரசு பாதுக்காப்பாக இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் முதல்வர் விஜய் அட்சயலட்சுமிக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.





