கம்பீரின் செயல்பாடுகள் இந்திய அணிக்கு பலன் அளிக்கும் : டிராவிட்
கம்பீரின் செயல்பாடுகள் இந்திய அணிக்கு பலன் அளிக்கும் என நம்புவதாக டிராவிட் தெரிவித்துள்ளார். ஒரு வீரராக கம்பீர் நிறைய அனுபவங்களை பெற்றுள்ளதாகவும், பயிற்சியாளராக சிறிது காலம் சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், எந்த ஒரு சூழலிலும், ஒருவர் தன்னுடைய அனுபவங்களையும், திறனையும் வெளிப்படுத்துவார் என்பதால், கம்பீரின் அனுபவங்கள் இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




