--- --:--:-- --

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

1

ரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட தேர்தல் நடைமுறை மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை மட்டுப்படுத்தும் முன்மொழிவு என்று குற்றம்சாட்டியுள்ளார்.

 

தேர்தலுக்கான சுழற்சி, பிராந்திய பிரச்னைகள், நிர்வாக முன்னுரிமைகள் ஆகியவற்றில் பரந்துபட்ட வேறுபாடுகள் உள்ளதால், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்று முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இதனை அமல்படுத்த, அலுவல் ரீதியாகவும், நிர்வாகத்திலும் சாத்தியமற்ற மாற்றங்கள் செய்வது அவசியம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.எனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாஜகவின் ஈகோவை திருப்திப்படுத்துவதற்கு மட்டுமே கொண்டுவரப்பட்டதாகவும், அதனை அமல்படுத்த முடியாது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

ஒரு கட்சியின் பேராசைக்கு இந்தியாவின் ஜனநாயகம் அடிபணியாது என்று கூறியுள்ள முதலமைச்சர் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் மத்திய அரசு கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon