தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்..!
தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கடந்த திங்கள்கிழமை சென்னை உள்ளிட்ட முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட மாவட்டங்களில் தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பெரிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சிறிய வழிபாட்டுத் தலங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
ஆயினும் இம்மாதம் 4 ஞாயிறு கிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்தபடி நாளை கடைகள்யாவும் அடைக்கப்பட உள்ளன. காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காது. பால், மருந்து கடைகள், மருத்துவமனை போன்றவற்றிற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.







