--- --:--:-- --

தமிழக முதலமைச்சருக்கு அமெரிக்க ரோட்டரி அமைப்பு வழங்கும் பால் ஹேரிஸ் ஃபெல்லோ..!

10.1

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அவரை அமெரிக்க ரோட்டரி அமைப்பு ஒன்று பால் ஹேரிஸ் பெல்லோ என்று அழைத்து கௌரவப்படுத்தியது.

 

இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு விடுத்துள்ள அறிக்கையில் அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த ரோட்டரி பவுண்டேஷன் ஆஃ ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பு குடிநீர் சுகாதாரம் நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களுக்கு பால் ஹேரிஸ் பெல்லோ என்று அழைத்து கௌரவப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி இந்த அமைப்பு பால் ஹேரிஸ் பெல்லோ என கௌரவப்படுத்தி உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon