பெண்களுக்கு இலவச செயற்கை கருத்தரித்தால் சிகிச்சை..!
தேர்தலில் வென்றால் மக்களுக்கு இலவச செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை அளிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலஹாரிஸ் போட்டியிடுகிறார்.
குடியரசு கட்சி வேட்பாளராக ட்ரம்ப் போட்டியிடுகிறார். பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மெக்சிகோவில் நடந்த குடியரசு கட்சிகளின் பேரணியில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்காவிற்கு அதிக குழந்தைகள் வேண்டும் என்றும் தான் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
மேலும் இந்த திட்டத்திற்கு தேவையான நிதி உதவியை அரசு அல்லது மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.





