முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது..!
பெண்கள் விரோத போக்கை திமுக கைவிட வேண்டும் என்றும் சொத்து வரியை குறைக்க கோரியும் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அனுமதியின்றி விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் சிவி சண்முகம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.





