--- --:--:-- --

கேரள தங்க கடத்தல் வழக்கில் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கரன் கைது..!

12

கேரள தங்க கடத்தல் வழக்கில் புதிய திருப்பமாக அந்த மாநில முதல்வரின் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கரனை அமலாக்கத்  துறையினர் கைது செய்திருக்கிறார்கள். கேரள தங்க கடத்தல் வழக்கில் என்‌ஐ‌ஏ சுங்கம் மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் அவருடன் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் மூலமாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் தனியார் ஆயுர்வேத மருத்துவமனை சிகிச்சை பெற்றுவந்த சிவசங்கரனை அமலாக்கத் துறையினர் அழைத்து வந்து விசாரித்தனர்.

 

6 மணிநேர விசாரணை செய்யப்பட்டு அமலாக்கத் துறையினர் கருப்பு பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இன்று காலை சிவசங்கரன் கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Right Menu Icon