விஷ்ணு விஷால் தந்தைக்கு முன் ஜாமின் வழங்க சூரி எதிர்ப்பு..!
நிலம் வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வு பெற்ற டிஜிபியுமான ரமேசுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் நடிகர் சூரி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலம் வாங்கி தருவதாக கூறி 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நடிகர் சூரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனிடைய விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் தனக்கு முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ரமேசுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று நடிகர் சூரி தரப்பில் வாதிடப்பட்டது. இதற்காக இடையீட்டு மனுவையும் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.







