5 கொரிய பெண்களின் வாழ்வை சீரழித்த பாஜக முன்னாள் பிரமுகர் கைது..!
ஆஸ்திரேலியாவில் 5 கொரிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இந்திய வம்சாவளியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட நபர் பாஜக கட்சியின் வெளிநாட்டு நண்பர்கள் பிரிவு முன்னாள் தலைவராக இருந்து வந்தார்.
ஐந்து கொரிய பெண்களுக்கு போதை பொருளை கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் நெருக்கமாக இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டுவதாகவும் புகார் வந்தது. அதன் பேரில் கைது செய்த போது அவரது செல்போன் மற்றும் கணினியை சோதனை செய்தனர்.
அதில் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஏராளமான வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் 39 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் அளித்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ததுடன் வழக்கு விசாரணையை மே மாதம் ஒத்தி வைத்தார்.





