கோயம்பேடு மார்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை..!
கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மாம்பழம் விற்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி சதிஷ்குமார் தலைமையில் 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் மாம்பழங்களை பழுக்க வைக்க எத்தனால் என்ற ரசாயனம் கலந்து மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனையில் ஈடுபட்டு தெரியவந்துள்ளது. இதனையடுத்து ரசாயனம் கலந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

எத்தனால் போன்ற ரசாயனம் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை உண்பதால் சிறுநீரக பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர்.





