--- --:--:-- --

அதிமுக தலைமை அலுவலகத்தில் இ.பி.எஸ். தீவிர ஆலோசனை..!

8

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.

 

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்: தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்தும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் மற்றும் தொகுதி வாரியான சாதக, பாதகங்கள் குறித்தும் இதில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

 

 

நிர்வாகிகளின் அடுத்தடுத்த விலகல் மற்றும் தேர்தல் தோல்வி போன்ற சவாலான சூழலில், கட்சி நிர்வாகிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

 

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon