--- --:--:-- --

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வெள்ளம்..!

6

குஜராத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறைந்த காற்றழுத்தம் மற்றும் காற்று சுழற்சி காரணமாக குஜராத் மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

 

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஜாம்நகர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சிக்கி பல பள்ளிப் பேருந்து விபத்தில் சிக்கியது. இதனை பொதுமக்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

 

கனமழை காரணமாக நீர் மட்டம் உயர்ந்து வருவதால் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள மஸ்தா பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் மாநிலம் முழுவதும் 4 நாட்கள் மேலும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon