--- --:--:-- --

பெங்களூரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்.. வாகன ஓட்டிகள் சிரமம்..!

7

னமழை காரணமாக பெங்களூருவில் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பெங்களூர் மாநகரில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை இடைவிடாது கனமழை பெய்தது.

 

இதன் காரணமாக நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் குளம் போல் காட்சி அளித்தன. இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் நீரில் மூழ்கின.

 

பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின. விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு வாகனங்கள் சாலையில் மெதுவாக ஊர்ந்து செல்வதை காண முடிந்தது.

 

Right Menu Icon