--- --:--:-- --

அரசு பேருந்தில் திடீரென கேட்ட சத்தம்.. பதறிய பயணிகள்..!

6

நாற்றம் பள்ளி அருகே டயர் வெடித்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் அவதி அடைந்தனர். ஓசூரில் இருந்து வேலூர் நோக்கி சென்று அரசு பேருந்து திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம் பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் அருகே சென்று கொண்டிருந்தது.

 

அப்பொழுது திடீரென அரசு பேருந்து டயர் வெடித்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் ஓட்டுநர் நாற்பதுக்கு மேற்பட்ட பயணிகளை நடுவிலே இறக்கி விட்டார்.

 

பேருந்தில் கூடுதல் டயர் உள்ளது என ஆங்கிலத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்த பொழுதும் கூடுதல் டயர் இல்லாததால் பயணிகள் இறக்கி விடப்பட்டனர். மேலும் அந்த வழியாக சென்ற பேருந்துகளை நிறுத்தி பயணிகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

Right Menu Icon