--- --:--:-- --

சாத்தான்குளம் சம்பவத்தில் மேலும் 5 போலீசார் கைது..!

10

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் கொலை வழக்கில் மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையை தொடர்ந்து சாத்தான்குளத்தில் பணியாற்றி ஐந்து காவலர்கள் கைது செய்துள்ளது சிபிசிஐடி. ஏற்கனவே காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கக் கூடிய சூழலில் தற்போது மேலும் ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

 

கடந்த மூன்று நாட்களாகவே காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள், சம்பவத்தன்று இல்லாமல் மற்ற நேரங்களில் , அதாவது பகல் நேரங்களில் பணியாற்றிய காவலர்களிடமும் கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் அந்த சம்பவம் நடந்தது குறித்து கேட்டறிந்து விசாரணை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் 10க்கும் மேற்பட்ட போலீசார் விசாரணையில் பங்கேற்றனர்.

 

மொத்தமாக 27 காவலர்கள் அந்த காவல் நிலையத்தில் பணியாற்றி உள்ளனர். எனவே அனைவரிடமும் இந்த விசாரணை நடைபெறுகிறது. தலைமைப் பெண் காவலர் சாட்சி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று பார்த்த காவலர்கள் இந்த விசாரணையில் பங்கேற்றனர். அந்த காவலர்கள் 5 பேர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஐந்து பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடல் பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon